துவ்ரவின் உறவினர் ரஞ்சித் பசு கூறுகையில், துவ்ர ஒரு கட்டுக்கோப்பான உறுப்பினர். அவர் இவ்வாறு செய்ய மாட்டார் என கூறினார்.
இது குறித்து அரசியல் அறிவியல் துறை பேராசியராக இருக்கும் சமரேஷ் சான்யால் கூறுகையில், திரிணமூல் "காங்கிரசுக்கு மத்தியில் ஆளும் பாஜகவுடன் மறைமுக உறவு இருக்கிறது என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டைத் துடைத்துக்கொள்ளும் வகையில் இந்த சுட்டுத் தள்ளு கோஷம் எழுப்பியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது திரிணமூல் காங்கிரஸ் அரசு" என்று தெரிவித்தார்.
ஆனால் தங்கள் கட்சி உறுப்பினர்களை கைது செய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்யும் சூழ்ச்சி இது என பாஜ கட்சியினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட ஒருவரில் துவ்ர பசு என்பவர் குற்றம் ஏதும் செய்யவில்லை என அவர்களின் வீட்டில் இருப்பவர்கள் கூறுகிறார்கள் என பாஜகவினர் கூறியுள்ளனர்.